காவிரி மேலாண்மை வாரியத்திற் கான போராட்டம் தொடரும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அர சாங்கம் அவ்வாரியத்தை அமைக் கும் வரை போராட்டம் ஓயாது என்றும் அவர் தெரிவித்தார். "போர் தொடர்கிறது. இந்தப் போரில் எங்களுக்கே வெற்றி கிடைக்கும்," என்று அறிக்கை ஒன்றில் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவு, தாழ்த்தப் பட்ட மக்கள், பழங்குடி மக்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது எனத் தெரியவந்துள்ளது என்றும் அந்த உத்தரவைக் கண்டித்து இன்று சென்னையில் மிகப் பெரிய ஆப்பாட்டம் நடத்தப்போவ தாகவும் ஸ்டாலின் அறிவித்தார். இவ்வேளையில், காவிரி விவ காரம் தொடர்பில் தான் பல கட்சிகளுடன் சேர்ந்து நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆத ரவு வலுவாக இருப்பதை உணர்ந்து கொண்ட ஸ்டாலின், திமுகவின் தலைமையகமான அறிவாலயத் தைக் கூட்டணிக் கட்சித் தலை வர்கள் ஒன்றுகூடும் இடமாக மாற்றியிருக்கிறார் என்று பேச்சு அடிபடுகிறது. ஸ்டாலின் இப் போது மேற்கொண்ட காவிரி உரிமை மீட்புப் பயணம், அவர் மேற்கொண்ட 'நமக்கு நாமே' பயணத்தைவிட மிகவும் சிறப்பான வெற்றியைப் பெற்றிருப்பதாகப் பேசப்படுகிறது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் (நடுவில்) செய்தியாளர்களிடம் பேசினார். படம்: தமிழக ஊடகம்

