தமிழ்நாட்டு நிலவரம் மோசம்: பயந்து ஓடும் முதலீட்டாளர்கள்

தமிழ்நாட்டு நிலவரம் மோசம்: பயந்து ஓடும் முதலீட்டாளர்கள்

1 mins read

தமிழ்நாட்டில் அன்றாடம் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்த வண்ணம் இருப்பதால் வெளிநாட்டு நிறு வனங்கள் அந்த மாநிலத்தில் முதலீடு செய்ய அஞ்சி ஓடு வதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெலுங்கானா, ஆந்திர மாநி லங்கள் இந்தச் சூழ்நிலையை விவேகத்துடன் பயன்படுத்திக் கொண்டு முதலீட்டாளர்களை இருகரம் கூப்பி வரவேற்பதாக வும் தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு முதல் ஏராளமான போராட்டங்கள் நடந்துவருகின்றன. காவிரி வாரியத்திற்கான போராட்டம், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பெரும் ஆர்ப்பாட்டங்களுடன் ஆங்காங்கே சிறிய அளவில் ஏராளமான போராட்டங்களும் திடீர் திடீரென நடக்கின்றன.

இத்தகைய போராட்டங்களால் தமிழ்நாட்டிற்குப் பெரும் பின்ன டைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக் கிறார்கள். தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்படும் பன்னாட்டு நிறு வனங்களில் சில விரிவாக்கத் திட்டங்களைத் தீட்டியிருந்தன என்றும் ஆனால் அவை இப் போது பின்வாங்கிவிட்டதாகவும் அதிகாரிகள் கவலையுடன் கூறினர். இதனிடையே, 2019 ஜனவரி யில் தமிழ்நாட்டில் நடக்கவிருக் கும் அனைத்துலக முதலீட்டாளர் மாநாடு மிகவும் வெற்றிகரமான தாக இருக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக் கையுடன் தெரிவித்தார். போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டைவிட்டு முதலீட் டாளர்கள் பயந்து ஓடுவதாகக் கூறுவது அபத்தமானது என்றும் அமைச்சர் கருத்துரைத்தார்.