பெங்களூரு: கர்நாடகாவில் நடை பெற உள்ள சட்டப்பேரவைத் தேர் தலில் அதிமுக பெயரில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக டிடிவி தினகரன் தரப்பு அறிவித்துள்ளது. இதையடுத்து அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளராக இருந்த புகழேந்தி இத்தகவலை பெங்க ளூருவில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார். தமிழகத்தில் மட்டுமே அதிமுக என்ற பெயரை தினகரன் தரப்பு பயன்படுத்தக் கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிற மாநிலங்களில் இயங்கி வரும் கழகத்தற்கு அந்தத் தடை பொருந்தாது எனச் சுட்டிக் காட்டினார். "கர்நாடகாவில் அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின் பேரில் முறை யாக தேர்தல் நடத்தப்பட்டு நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டோம்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டி: புகழேந்தி அறிவிப்பு
1 mins read