சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடி, உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி, வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். யாராக இருந்தாலும் உணர்ச்சி வசப்படாமல் மன உறுதியுடன் போராடவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண் டுள்ளார். "கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தபோது மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக, காங் கிரஸ் கூட்டணி அரசு உடனடி யாக அரசாணை வெளியிட்டு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழுவை அமைத்து இருக்கலாம். ஆனால் அவற்றைச் செய்ய தவறினர்.
"எனவே காவிரி பிரச்சினை பெரிதாவதற்கு அவ்விரு கட்சி களும்தான் காரணம். 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா உச்சநீதிமன்றம் சென்று, நடுவர் மன்றத் தீர்ப்புக்கு அரசாணை பெற்றார். அதை மறந்துவிட்டு போலித்தனமாகப் போராடி வருகிறார்கள்," என்றார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். மேலாண்மை வாரியம் தொடர் பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத் தில் கால அவகாசம் கேட்டாலும் இறுதியில் நல்ல தீர்வு வரும் என உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், உரிமைக்காக போராடுபவர்கள் எந்த வழியை தேர்ந்து எடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே முடிவும் அமையும் என்றார். அதிமுக எப்போதுமே அற வழியில்தான் போராட்டம் நடத் தும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்ட அவர், காவிரிக்காக இப்போது நடக்கும் போராட்டங் கள் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ளதாக விமர்சித்தார்.

