சென்னை: திருமங்கலம் பகுதி யில் உள்ள காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது. அச்சமயம் உதவி ஆணையர் கமீல்பாட்சாவிடம் இருந்து ரூ.2.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு வந்த கட்டட ஒப்பந்ததாரரும் கமீல்பாட்சாவின் நண்பருமான செல்வம் என்ப வரிடம் இருந்தும் ரூ.2.58 பறி முதல் செய்யப்பட்டது. இத்தொகைக்கு இருவருமே உரிய கணக்கைத் தெரிவிக்க வில்லை. இதையடுத்து உதவி ஆணையர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதவி ஆணையர் அலுவல கத்தில் அதிகளவு லஞ்சப் பணம் புழங்குவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை மேற்கொண் டதாக லஞ்ச ஒழிப்புப் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் காவல்துறை வட் டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
லஞ்சம்: உதவி ஆணையர் கைதாக வாய்ப்பு
1 mins read

