பொன்.ராதா: ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் என்னிடம் பேரம் பேசினர்

பொன்.ராதா: ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் என்னிடம் பேரம் பேசினர்

1 mins read

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் இருந்து தாம் பணம் வாங்கியதாக ஒருதரப்பினர் அவதூறு பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முன்பே தாம் 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அப்போது மக்கள் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் கூறினார். "அப்போது அனை வருமே அந்த ஆலை வந்தால் வேலை கிடைக்கும் என்றே நினைத்திருந்தனர். அதனால் ஆலை எளிதாகத் தொடங்கப்பட்டுவிட்டது. அப்போது அந்த ஆலை தரப்பில் என்னிடம் பேரம் பேசினர். அவர்கள் அணு கிய போதும், தேர்தல் செல வுக்காக எனக்குப் பணம் கொடுத்த போதும் வாங்க மறுத்தவன் நான்," என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்பு தமிழகத்தில் இருந்த திமுக, அதிமுக அரசுகளும், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும் தான் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஒப்புதல் அளித்த தாகச் சுட்டிக்காட்டிய அவர், ஸ்டெர்லைட் ஆலையுடன் ஊசி முனை அளவுகூட தமக்குத் தொடர்பு கிடை யாது என்றார். "தமிழகத்தில் எந்தத் திட்டமும் நடைபெறக் கூடாது என்பதில் மிகக் கவனமாகவும் கொடூரமாக வும் ஓர் இயக்கம் வேலை செய்து கொண்டு இருக் கிறது," என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.