முதல்வர் பழனிசாமி: மேலாண்மை வாரியம் சட்டரீதியாக தீர்க்கக்கூடிய பிரச்சினை

முதல்வர் பழனிசாமி: மேலாண்மை வாரியம் சட்டரீதியாக தீர்க்கக்கூடிய பிரச்சினை

1 mins read
e0e59c5a-4e41-4476-9451-1440dd295444
-

கோவை: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி மத்திய அரசு விரைந்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். கோவையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், காவிரி விவகா ரத்தில் தமிழகத்துக்கு தேவையான உரிமைகளை நீதிமன்றம் அளித்தி ருப்பதாகக் கூறினார். எனவே நீதி மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்டரீதியாக தீர்க்கக்கூடிய பிரச்சினை என்றார். "காவிரி மேலாண்மை வாரி யத்தை அமைப்பது தொடர்பில் மே மாதம் 3ஆம் தேதிக்கு பின்னரும் மத்திய அரசு காலதாமதம் செய் தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறீர்கள். இது கற்பனையான கேள்வி.

"உச்சநீதிமன்றம் அழுத்தம் திருத்தமாக தெரிவித்து உள்ளது. மே 3ஆம் தேதிக்குள் தாங்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெளிவாகக் கூறியுள்ளனர்," என்று பழனிசாமி சுட்டிக்காட்டினார். காவிரி பிரச்சினை என்பது சமூக வலைத்தளங்களில் விவா திக்கக்கூடிய பிரச்சினை அல்ல என்றும், இதுகுறித்த கோரிக்கை களை பிரதமரிடம் முன்வைக்கும் போது அதை எழுத்து மூலம், விண்ணப்பமாகத்தான் அளிக்க இயலும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.