ஆசைக்கு இணங்க மூளைச்சலவை செய்த கல்லூரிப் பேராசிரியை

ஆசைக்கு இணங்க மூளைச்சலவை செய்த கல்லூரிப் பேராசிரியை

2 mins read
817a13d9-b11b-499d-8285-c81cda3828aa
-

விருதுநகர்: பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங் குமாறு கல்லூரி மாணவிகளை வற்புறுத்திய பேராசிரியையை தனியார் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இச்சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் நிர்மலா தேவி என்ற அப்பேராசிரியை மாணவிகளிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது ஒலித்தொகுப்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயரதிகாரிக ளின் ஆசைக்கு இணங்கினால் பல்வேறு சலுகைகளைப் பெறலாம் என மாணவிகளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறும் நிர்மலா, இந்த காலத்தில் தாம் சொல்லக் கூடிய இந்த விஷயம் மிக சாதா ரணமான ஒன்று என்று குறிப்பிடு வது அந்த ஒலித்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

தான் பணியாற்றும் கல்லூரியில் படித்து வரும் நான்கு மாணவி களை அவர் இவ்வாறு வற்புறுத்தி உள்ளார். 4 மாணவிகளும் ஒரே இடத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டு பேசும் நிர்மலா, தான் சொல்ல வரும் தகவல் ரகசியமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஆனால் நிர் மலா கூறுவது போல் செயல்பட முடியாது என்று நான்கு மாணவி களும் மறுத்துள்ளனர். "உயர் அதிகாரிகள் சிலர் கல்லூரி மாணவிகளை சில விஷயங்க ளுக்காக எதிர்பார்க்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய முடியும். "உங்களுக்கு பட்டம் வாங்கிக் கொடுப்பதில் கவனமாக இருக்கி றேன். நீங்கள் ஒத்துழைக்காவிட் டால் தண்டிக்க மாட்டேன்.

உங்களை கைதூக்கிவிடவே அழைக்கி றேன்," என்றெல்லாம் பேசி மாண விகளை மூளைச்சலவை செய்ய முயன்றார் நிர்மலா என்பதே பல ரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இதனிடையே நிர்மலாவை கைது செய்ய வலியுறுத்தி திங்கட்கிழமை அருப்புக்கோட்டை கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், மாதர் சங்கம் உள் ளிட்ட மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.