தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 16 இடங்களில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. ஆலையை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரசார் 113 பேர் கைது செய்யப்பட்ட னர். அவர்கள் அனைவரும் மடத்தூர் பகுதியில் திரண்டு, ஸ்டெர்லைட் ஆலையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது போலிசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்நிலையில், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் சுமார் 200 பேர் திரண்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். பேராலய வளாகத்தில் கறுப்புக்கொடி ஏற்றி, கறுப்பு பலூன்களையும் பறக்கவிட்டனர். படம்: தகவல் ஊடகம்
தூத்துக்குடியில் 16 இடங்களில் நடைபெற்ற போராட்டம்
1 mins read
-

