காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வழக்கு: எட்டுப் பேர் மீது குற்றச்சாட்டு

காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வழக்கு: எட்டுப் பேர் மீது குற்றச்சாட்டு

2 mins read
aa132760-4bd5-4c24-8b05-3df2f0ca4bb3
-

உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள எட்டு வயது காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை போராட்டங்களுக் கிடையே நேற்று கத்துவாவில் தொடங்கியது. இந்த வழக்கில் முன்னாள் அரசு அதிகாரி சஞ்சி ராம், அவர் மகன் விஷால் ஜங்கோத்ரா, போலிஸ்காரர்கள் உட்பட எட்டுப் பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவன் சிறுவன் என்ப தால், அவன் தனி அமர்வு அமைக்கப்பட்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட உள்ளான். சிறுமி கடத்தல், வன்புணர்வு, கொலை ஆகிய குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையினரான முஸ்லிம் நாடோடி மக்களை ஜம்மு காஷ்மீரி லிருந்து வெளியேற்றுவதற்காக திட்டமிட்டே சிறுமியின் படு கொலை அரங்கேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடமான கோவிலின் நிர்வாகி இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் முன் பேசிய ஓய்வு பெற்ற வருவாய்துதுறை அதிகாரி 60 வயது சஞ்சிராம், தனக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்தார். உண்மை கண்டறியும் சோதனை நடத்தி இந்தக் கொலையின் உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். வழக்கு விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி ஆசிஃபா கோவிலில் அடைக்கப்பட்டு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, எட்டு பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று போலிஸ் அறிக்கை தெரிவித்தது. ஜனவரி மாதம் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமியைப் பாலியல் வன் கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவாக அந்தப் பகுதியில் போராட்டங்கள் நடந்தன. நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவிடா மல் வழக்கறிஞர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

சிறுமி ஆசிஃபாவுக்காகவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான ஏனைய சிறுமிகளுக்காகவும் இந்தியா முழுவதும் கண்டனக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மும்பையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். படம்: ஏஎஃப்பி