மேளதாளத்துடன் பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட சீர்வரிசைப் பொருட்கள்

மேளதாளத்துடன் பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட சீர்வரிசைப் பொருட்கள்

1 mins read
0f8ee1a6-6734-4a5e-976a-8cde78c187d5
-

சிதம்பரம் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தியும் பொதுமக்களுக்கு அரசுப் பள்ளி மீது நல்ல எண்ணங்களை ஏற்படுத்தவும் தன்னார்வ அமைப்புகள் பள்ளிக்கு வழங்கிய பொருட்களைக் கிராம மக்கள், மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். 'ஊர் கூடி கல்விச் சீர் திருவிழா' என்ற பெயரில் வித்தியாசமான இந்த நிகழ்வு அரங்கேறியது.

இப்பள்ளிக்கு தன்னார்வ அமைப்புகள் கணினி, மின்விசிறி, சுவர் கடிகாரம், தேசிய தலைவர்களின் படம் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அளித்துள்ளன. இவற்றை ஊர்வலமாகக் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக எடுத்து வந்து மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார்கள். படம்: தகவல் ஊடகம்