சென்னை: பொய் வழக்கு பதிவு செய்து தம்மைத் துன்புறுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்துல் கரீம் என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போலிசா ருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. பா ளை ய ங் கோ ட் டை யை ச் சேர்ந்த அப்துல் கரீம், பேருந்து நிலையம் அருகே உள்ள பாஸ்கர் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் மருந்துக்கடை நடத்தி வந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு திடீரென அடியாட்களுடன் வந்த பாஸ்கர், கடையில் இருந்த பொருட்களைத் தூக்கி எறிந்து விட்டு, கடையைப் பூட்டிச் சென் றுள்ளார்.
இதையடுத்து அப்துல் கரீமை கைது செய்த போலிசார், அவரை ஐந்து நாட்கள் ஓர் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்திய தாகக் கூறப்படுகிறது. மேலும் கைபேசி திருடியதாகப் பொய் வழக்குப் பதிவு செய்து அப்துல் கரீமை சிறையில் அடைத்ததாகத் தெரிகிறது. போலிசார் தாக்கியதால் காய மடைந்த அவர், உரிய சிகிச்சை பெற்ற பின், மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போலிசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது ஆவணங்கள் வழி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித் தார். இதையடுத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், இரு காவலர்கள் ஆகிய ஐந்து பேரிடம் இருந்து தமிழக அரசு ரூ.4.50 லட்சம் பெற்று அப்துல் கரீமுக்கு நிவாரணமாக அளிக்க வேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

