சென்னை: கல்வி கற்க வந்த மாணவிகளை காமத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள துடித்த காட்டுமிராண்டிகள் யாராக இருந் தாலும் அவர்களை தண்டிக்காமல் தப்ப விடக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இவ்விஷயத்தில் தம் மீது தவறு இல்லையெனில் அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் தான் தமிழக ஆளுநர் ஈடுபட வேண்டுமே தவிர, அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான நடவடிக் கைகளில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது என்றும் அவர் தெரி வித்துள்ளார். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக் கழக உயரதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு 4 மாணவிகளைக் கட்டாயப்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் கைதானார்.
இந்நிலையில், மாணவிகளை வற்புறுத்திய விவகாரத்தில் ஆதா ரங்களை அழிக்க சதி நடை பெறுவதாகவும், சம்பந்தப்பட்ட நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்விப்பதற்காக சில மாணவிக ளுக்கு வலைவீசப்பட்டது தொடர் பான விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடத்திய செய்தியாளர்கள் சந்திப் பும், அதில் அவர் அளித்த விளக் கங்களும் சந்தேகங்களைத் தீர்ப் பதற்கு மாறாக அதிகரித்துள்ள தாக அறிக்கை ஒன்றில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். "இந்த விஷயத்தில் ஆளுநர் தலையிட முடியாது. ஏனெனில், இது பல்கலைக்கழகம் சார்ந்த விஷயமல்ல. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 4 மாணவிகளை அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள சிலருக்குப் பலியாக்க முயன்ற, மன்னிக்கவே முடியாத குற்றம் சார்ந்த விஷயம்," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நிர்மலா தேவியிடமிருந்து 3 கைபேசிக் கருவிகள் கைப்பற்றப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவற்றிலிருந்து பல்வேறு பெரிய மனிதர்களைத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களும் அறுபதுக்கும் மேற்பட்ட புகைப் படங்களும் கைப்பற்றப்பட்டுள் ளதாகக் கூறியுள்ளார். "இந்த விவகாரத்தில் தொடர் புடைய பல பெரிய மனிதர்களின் பெயர்களைப் பட்டியலிட்ட நிர்மலா தேவி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்குத் துணிச் சல் உண்டா என்று சவால் விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்துதான் நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணையை சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டது. "இது குற்றவாளிகளைக் காப் பாற்றும் முயற்சியே தவிர, அவர் களை தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல," என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார். நிர்மலா தேவியைப் பலிகடா வாக்கி விட்டு, அதிகார உச்சியில் உள்ள பெரிய மனிதர்களைக் காப்பாற்ற சதி நடப்பதாகச் சாடி யுள்ள அவர், இந்த சதித் திட் டத்தில் நிர்மலாதேவியின் உயிருக் குக் கூட ஆபத்து ஏற்படலாம் எனக் கவலை தெரிவித்துள்ளார்.

