மதுரை: கிரைண்டருக்குள் வைத்து சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்த ஆடவர் மதுரை விமான நிலையத்தில் சிக்கினார். அவரிடம் இருந்து 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்தவர் ராம்குமார். 35 வயதான இவர், நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தார். விமான நிலையத்தில் பயணிகள் வழக்க மான சோதனைகளுக்கு உட்படுத் தப்பட்டனர்.
அப்போது ராம்குமார் கொண்டு வந்திருந்த மூன்று கிரைண்டர்கள் அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின. இதை யடுத்து அவற்றை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது கிரைண்டரில் உள்ள 'காயில்' பகுதியை தங்கத் தில் செய்திருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இரு கிரைண்டர்களில் இதுபோல் 906 கிராம் தங்கத்தைக் கொண்டு 'காயில்' உருவாக்கப் பட்டது தெரிய வந்தது. இதையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் ராம்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மதுரை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் சிக்குவது அதிகரித்து வருகிறது.

