காற்று நிரப்பும்போது வெடித்துச் சிதறிய டயர்: இளையர் பரிதாப பலி

காற்று நிரப்பும்போது வெடித்துச் சிதறிய டயர்: இளையர் பரிதாப பலி

1 mins read

ஈரோடு: இயந்திரம் ஒன்றின் டயருக்கு காற்று நிரப்பும் போது திடீரென அது வெடித்துச் சிதறியதில் தூக்கி வீசப்பட்ட இளையர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. குறிச்சியைச் சேர்ந்த 24 வயதான அங்கப்பன் என்ற அந்நபர், 'செந்தில் டயர்ஸ்' என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் டயரில் காற்று நிரப்பியபோது, அதிக அழுத்தம் காரணமாக அது திடீரென வெடித்துச் சிதறியது. பெரிய டயர் என்பதால், அது வெடித்தபோது அங்கப்பன் சுமார் 30 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் கட்டட மேற்கூரையின் மீது அதிவேகமாக மோதியதில், அவரது மூளை சிதறியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.