ஆளுநருக்கு எதிர்ப்பு: பேரணியாகச் சென்ற திமுகவினர் கைது

ஆளுநருக்கு எதிர்ப்பு: பேரணியாகச் சென்ற திமுகவினர் கைது

1 mins read

சென்னை: மாவட்டந்தோறும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்ற திமுகவினர் கைதாகினர். ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார் பன்வாரிலால் புரோகித். மேலும் பொது மக்களிடம் குறைகளையும் கேட்டறிகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாகக் குற்றம்சாட்டி திமுக சார்பில் நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. அக்கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி சென்ற அவர்களைத் தடுத்து நிறுத்திய போலிசார், 800க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.