சென்னை: வீரத்துக்குப் பெயர் பெற்ற தீரன் சின்னமலை மண்ணுக்குச் சொந்தமான ஒருவருக்கு சசிகலாவும் தினகரனும் முக்கிய அமைச்சர் பதவியைக் கொடுத்தனர் என்றும், அவரோ இருவருக்கும் துரோகம் செய்துவிட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தினகரன் கட்சியைச்சேர்ந்த இவர், அமைச்சர் செங்கோட்டையனை மறைமுகமாகக் குறிப்பிட்டு இவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது. "துரோகம் செய்தவரை வாக்காளர்கள் பார்த்துக் கொள்வார்கள்," என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கும் தினகரனுக்கும் துரோகம் செய்துவிட்டார்: அமைச்சர் மீது மறைமுக குற்றச்சாட்டு
1 mins read

