தினகரன்: மோடியுடன் சேர்ந்து துரோகம் செய்கிறார் முதல்வர்

தினகரன்: மோடியுடன் சேர்ந்து துரோகம் செய்கிறார் முதல்வர்

2 mins read
6632fbe9-1d63-49b1-821a-b953ec869af4
-

தூத்துக்குடி: தமிழக மக்கள் குறித்து முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் எந்தவித அக்கறையும் இல்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வமும் மோடியுடன் சேர்ந்து கொண்டு தமிழகத்துக்குத் துரோகம் இழைத்து வருவதாகத் குற்றம் சாட்டினார். மத்திய அரசு தற்போது கார்ப் பரேட் நிறுவனங்களுக்கான அர சாக மாறிவிட்டது என்றும், தமிழகத்தில் நாசக்காரத் திட்டங் களைத் திணிப்பதாகவும் தினக ரன் பகிரங்கமாகச் சாடினார். "பிரதமர் மோடியோ, இந்திய வரைபடத்தில்தான் தமிழகமும் இருக்கிறது என்கிற நினைவு கூட இல்லாமல், சென்னைக்கு வந்து செல்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூட வேண்டும். இல்லை என்றால் ஆலையை முற்றுகையிட்டு அதை மூடும் வரை உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபடுவோம்.

"பன்னாட்டு நிறுவனங்களால் தமிழகம், சோமாலியாவாக மாறி விடும் அவல நிலை காணப்படுகி றது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது," என்றார் தினகரன். மக்களுக்கு அச்சம் ஏற்படுத் தும் எந்தத் திட்டமும் நிறைவேற் றப்படக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், அந்தந்த பகுதியில் வாழும் மக்களிடம் கருத்து கேட்ட பின்பே திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றார். "ஸ்டெர்லைட் ஆலையும் கூடங்குளமும் தென் தமிழகத்தில் இருக்கும் இரண்டு வெடிகுண்டு கள். இவை இரண்டும் மூடப் படவில்லை என்றால் இங்கு மட்டு மல்ல தமிழகத்துக்கே ஆபத்து தான்," என்று தினகரன் மேலும் தெரிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன்.