ஒன்பது ஆலோசகர்களை நீக்க கெஜ்ரிவாலுக்கு உத்தரவு

ஒன்பது ஆலோசகர்களை நீக்க கெஜ்ரிவாலுக்கு உத்தரவு

1 mins read

புதுடெல்லி: அனுமதி பெறாமல் நியமிக்கப்பட்டதாக டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் பணியாற்றி வந்த 9 ஆலோசகர்களை மத்திய உள்துறை அமைச்சு நீக்கியுள்ளது. ஆம் ஆத்மி ஆளும் டெல்லி அரசில் 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் ஆலோசகர் மற்றும் சிறப்பு உதவியாளர்களாக 9 பேர் அவ்வப்போது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட னர். துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு ஆலோசகர் களாக அதி‌ஷி மர்லேனா, அரு ணோதய் பிரகாஷ் மற்றும் நிதித் துறை ஆலோசகராக வழக்கறிஞர் ராகவ் சட்டா உள்ளிட்ட 9 பேர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் டெல்லி அரசின் பொது நிர்வாகத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஓர் உத்தரவு அனுப்பப் பட்டது. அதில், டெல்லி அரசின் 9 ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு உதவியாளர்கள் பதவிக்கு முன் அனுமதி பெறாததால் அவர்கள் அனைவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறப் பட்டிருந்தது. இதற்காக டெல்லி அரசின் 1997ஆம் ஆண்டு வரையறுக்கப் பட்ட விதிகள் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இந்த உத்தரவு டெல்லியின் துணைநிலை ஆளுநர் டாக்டர் அனில் பைஜல் ஒப்புதலுடன் அனுப்பப்பட்டிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.