பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 100 வயது வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகிறார். எச்.எஸ்.துரைசாமி (படம்) எனும் சுதந்திர போராட்ட தியாகி யான இவர் மனைவி லலிதாம்மா வுடன் பெங்களூரில் வசிக்கிறார். கடந்த வாரம் தனது 100வது பிறந்த நாளைக் கொண்டாடினார். கர்நாடக மாநிலம் உதயமான தும் 1952ஆம் ஆண்டு நடந்த முதலாவது சட்டமன்றத் தேர்தலில் இருந்து இப்போது 2018ல் நடை பெறும் 15வது தேர்தல் வரை அனைத்துத் தேர்தலிலும் போட்டி யிட்டு வருகிறார். அதற்கு முன் 1951ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கலாசிதனது முதலாவது தேர்தலில் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
என்றாலும் தொடர்ந்து சளைக்காமல் அனைத்துத் தேர்தலிலும் போட்டியிட்டுத் தேர்தல் மன்னன் பட்டம் பெற்றுள்ளார். இப்போதும் அவர் மனுதாக்கல் செய்துள்ளார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள துரைசாமி, அவரே நேரில் வந்து மனுத் தாக்கல் செய்தார். இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களில் 48 பேர் மீதும் பாஜனதாவில் 30 வேட்பாளர்கள் மீதும் மதசார் பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களில் 17 பேர் மீதும் கிரிமினல் குற்றச் சாட்டுகள் உள்ளன. காங்கிரசில் 134 பேரும் பாஜகவில் 97 பேரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 46 பேரும் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

