லண்டனில் மோடி; அரசின் வரவேற்பும் மக்களின் எதிர்ப்பும்

லண்டனில் மோடி; அரசின் வரவேற்பும் மக்களின் எதிர்ப்பும்

1 mins read
f9bdd75b-2942-45c0-985c-3eea30e6f184
-

லண்டன்: பலாத்கார சம்பவங்கள் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மோடி மௌனம் காப்பதை எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்துள்ள நிலையில், லண்டனில் அதற்கு அவர் பதிலளித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடி கடந்த 16ஆம் தேதி சுவீடன் புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் நாடு கள் மாநாட்டில் கலந்துகொள்வதற் காக நேற்று முன்தினம் இங்கி லாந்து சென்ற மோடியை வெளி யுறவுத் துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் வரவேற்றார். அதன் பிறகு பிரதமர் தெரசா மேவைச் சந்தித்தார் மோடி. அப்போது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை, இந்திய, பசிபிக் வட் டாரங்களை ஒன்றிணைந்து பாதுகாப்பது, தொழில் மேம்பாடு உள் ளிட்ட பல விஷயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங் கள் கையெழுத்தாகின.

அதன் பிறகு லண்டன் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய மோடி, "விமர்சனங்கள் வேறு, குற்றச்சாட்டுகள் வேறு. நான் விமர்சனங்களை வரவேற்கிறேன். "அதன் மூலம் என்னை திருத்திக் கொள்வேன். ஆனால் விமர்சனம் செய்தவர்களுக்கு பதி லளிக்க வேண்டியதில்லை.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திற்குச் சென்ற இந்திய பிரதமர் மோடியை பரதநாட்டிய கலைஞர்கள் வரவேற்றனர். படம்: ஏஎஃப்பி