நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்து - வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் பேட்டி

நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்து - வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் பேட்டி

3 mins read

மதுரை: மதுரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரை நேரில் சந்தித்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு மதுரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அருப்புக்கோட்டை யைச் சேர்ந்த வழக்கறிஞர் பால சுப்பிரமணியன் சிறையில் நிர்மலா தேவியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

"அருப்புக்கோட்டையில் கல்வி நிறுவனங்களுக்கு இடையே நிலவும் போட்டியால் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. ஆடியோவில் பேசியது நான்தான் என்றும், ஆனால் எடிட் செய்யப் பட்டு வெளியிடப்பட்டுள்ளது எனவும் சிறையில் நிர்மலாதேவி கூறினார். தன்னை வைத்து, தான் பணிபுரியும் கல்லூரிக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் முயற்சி நடைபெறுவதாக நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்," என வழக் கறிஞர் பாலசுப்பிரமணியன் கூறி னார். மேலும் அவர் கூறுகையில் "சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்­தார். ஒரு சில அசாதாரண சம்பவங்கள் நடைபெறுகின்றன," என்றார். "ஜெயிலர், வார்டன் உடன் இருந்ததால் மேலும் அவருடன் பேச முடியவில்லை. சிறையில் தனது உயிருக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரி சிறைத்துறையை அணுகுமாறு கேட்டுள்ளார்.

"இதுதொடர்பாக நீதிமன்றத்­திலும் மனு தாக்கல் செய்யப்படும். சிபிசிஐடி கட்டுப்பாட்டில் வரும்­போது அவரை மீண்டும் சந்தித்துப் பேசுவேன். அவருக்கு பிணை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். பிணையில் வந்த பிறகு அவரிடம் உள்ள ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்," என்று வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலி யுறுத்தியுள்ளார். அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி தொலைபேசி உரையாடலில் ஆளுநர் அளவிலானவர்கள் என்று கூறுவதால் இப்பிரச்சினை யின் ஆழம் என்னவென்று தெரிகிறது. இந்த நிலையில் ஆளுநரின் அளவுக்கு அதிகமான பதற்றமும் அதனைத் தொடர்ந்து விசாரணை ஆணைய அறிவிப்பும் பேட்டியும் பேட்டியின் முடிவில் அவர் நடந்து கொண்ட விதமும் என இவை எதுவுமே முறையானதாக, நெறி­யானதாகத் தோன்றவில்லை. ஆளு­ந­ரின் வரம்பு மீறிய செயல் என்பது மிக தவறான முன்னு­தாரணத்தைத்தான் ஏற்படுத்து­ கிறது. மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருக்கும் விசாரணை அமைப்பு­களே நம்பத் தகுந்தவை அல்ல என்ற கருத்து நிலவிக் கொண்­டிருக்கும் நேரத்தில், ஆளுநரின் தனிஆள் விசாரணை ஆணையம் என்பது நம்பிக்கை உடையதாக இருக்குமா? அல்லது இது என்ன சாதிக்கப் போகிறது? மேலும் இது சுயாட்சித் தத்துவத்தை நசுக்குவது ஆகும்.

ஆளுநர் தனது பேட்டியின் முடிவில் பெண் செய்தியாளரிடம் தன் மாண்பை மீறி நடந்து கொண்ட விதம் கடும் கண்ட­னத்துக்குரியது. இதுபோன்று தனிப்பட்ட நட­வடிக்கைகளிலும் மாநில அதி­காரத்திலும் எல்லை மீறி அவர் நடந்துகொள்ளும் விதமும் ஆட்­சேபத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது ஆகும். "ஆளுநர் பதவிக்கான மாண்பைக் காப்பாற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமாகவே டெல்லி திரும்பிவிட வேண்டும். "பழனிசாமியின் அரசு ஆளுநர் மீதும், மத்திய அரசின் மீதும் கொண்டுள்ள அளவு கடந்த அச்சம் நீடிக்கும் வரை தமிழ­கத்துக்குப் பின்னடைவையும் தலை­குனிவையும்தான் ஏற்படுத்து­கிறது," என்று டிடிவி தினகரன் சாடியுள்ளார்.