புதுச்சேரி: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரியும் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளி கையை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலைக் கழகத்தினர் 63 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளிடம் கைத் தொலைபேசியில் பேசி, அவர் களை பாலியல் ரீதியாக தவறான முறையில் நடக்க கட்டாயப் படுத்தியதாக புகார் எழுந்தது.
மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசிய ஆடியோ சமூக ஊடகங் களில் பரவி பரபரப்பை ஏற்படுத் தியது. நிர்மலாதேவி பேசிய ஆடி யோவில் தமிழக ஆளுநரை பற்றி குறிப்பிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆளுநர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து செய்தியாளர் களைச் சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "தன் மீதான குற்றச்சாட்டுத் தவறா னது. இதில் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்," என்று தெரிவித்து உள்ளார். இந்நிலையில், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
புதுச்சேரி = செஞ்சி சாலையில் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நடந்த அந்தப் போராட்டத்தில் தமிழக ஆளுநருக்கு எதிரான வாசகங் களைக் கொண்ட பதாகைகள் ஏந்திச் செல்லப்பட்டன. போலிசாரின் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால் போலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடை யில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

