எச்.ராஜா கருத்து: கட்சித் தலைவர்கள் கண்டனம்

எச்.ராஜா கருத்து: கட்சித் தலைவர்கள் கண்டனம்

2 mins read

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங் களவை உறுப்பினருமான கனி மொழி குறித்து பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா தெரி வித்துள்ள கருத்து புது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. எச்.ராஜாவின் கருத்து தமக்கு மனவேதனையைத் தருவதாக தமிழக பாஜக தலைவி தமிழிசை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக தலை மையை நோக்கி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார். அண்மையில் செய்தியாளர் களைச் சந்தித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பெண் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல், அவரது கன்னத்தை சிரித்தபடி தட்டினார். இதை அந்தப் பெண் செய்தி யாளர் டுவிட்டரில் பதிவிட்டு தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த கனிமொழி, பெண் செய்தியாளரின் அனுமதி யின்றி ஆளுநர் அவரைத் தொடு வது கண்ணியமான செயலல்ல எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கனிமொழி குறித்து எச்.ராஜாவும் தன் பங்குக்கு டுவிட்டரில் பதிவிட்டார். அதில், "தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்களா, மாட்டார்கள்," என எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

"பொது வாழ்க்கையில் ஈடுபட்டி ருக்கும் பெண்கள் எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர் களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தரு கிறது," என தமிழிசை தெரிவித் துள்ளார். ப.சிதம்பரம் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில், "கள்ளக் குழந்தை என எதுவுமே இல்லை. எல்லாக் குழந்தைகளுமே நல்லக் குழந் தைகள்தான்," எனக் குறிப்பிட் டுள்ளார். "ஏனென்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தாய், ஒரு தந்தை இருக்கிறார்கள். பாஜக இதில் தனது நிலையை தெளிவு படுத்துமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம். சட்டம் ஒழுங்கை எச்.ராஜா சீர்குலைப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் சாடியுள்ளார்.