பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: நீதிபதிகள் கவலை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: நீதிபதிகள் கவலை

fallback

20 Apr 2018 - 6:00 am

1 mins read

சென்னை: தமிழகத்தில் வீட்டில் தனியாக இருக்கும் வயதான பெண்கள் கொடூரமாக தாக்கப் பட்டு கொலை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கள் கவலை தெரிவித்துள்ளனர். சங்கிலிப் பறிப்புச் சம்பவங்க ளும் அதிக அளவில் நடைபெறுவ தாக நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். மொத்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட நீதிபதி கள், இதுபோன்ற குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்வது, மனநல ஆலோசனைகள் வழங்குவது என் பது போதுமானதாக இல்லை என் றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கான செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும் என் றும், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை யின் போதே நீதிபதிகள் மேற்கண்ட வாறு குறிப்பிட்டனர். "எனவே இன்றைய தேதி வரை யில், இதுபோன்ற குற்றச்சம்பவங் களுக்காக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது? இக் குற்றச் சம்பவங்களைத் தடுக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்பது குறித்து விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும்," என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.