'தமிழக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம்'

'தமிழக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம்'

1 mins read

சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழ லாம் என்று மு.க.ஸ்டாலின் மீண்டும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடக்கும் 'குதிரை பேர' அரசு மக்களுடைய ஆதரவு பெற்ற அரசல்ல என்றும் அவர் கூறினார். திமுக செயல் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு எம்எல் ஏக்களின் எண்ணிக்கை அடிப் படையில் இந்த ஆட்சி தொடர் கிறது. எந்த நேரத்திலும் இது கவிழும். நீதிமன்றத்தின் தீர்ப்புக் காக காத்துக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சியை மத்தியில் இருக்கின்ற பாஜக அரசு காப்பாற்றிக் கொண்டு வரு கிறது. காரணம், அவர்களின் அடிமையாக இந்த ஆட்சி இருப் பதால் காப்பாற்றுகிறார்கள். "இன்று திமுக ஆட்சி இருந் திருந்தால் நாம் அடிமையாக இருந்திருப்போமா?

நமது உரிமை களை விட்டுக்கொடுத்திருப் போமா? மாநில சுயாட்சிக்குப் பங்கம் வரும் நிலையை அனு மதித்து இருப்போமா? தமிழகத்தில் இப்போதுள்ள ஆளுநரின் நிலை என்ன? தமிழ்நாடே வெட்கித் தலைகுனியும் சூழலுக்குத் தள்ளப் பட்டிருக்கிறது. இந்த ஆட்சியும் சரியில்லை. மத்திய அரசின் பிரதிநிதியாக இந்த ஆட்சியைக் கண்காணிக்கின்ற ஆளுநரின் நிலை என்ன என்பதையும் அனை வரும் எண்ணிப் பார்க்க வேண்டும்," என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.