சென்னை: தமிழகத்தில் போலி முத்திரைத் தாள்களைத் தடுக்க மின்னணு முத்திரை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய மின்னணு முத் திரை முறையை முதல்வர் எடப் பாடி பழனிசாமியும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதி பதியும் நேற்று தொடங்கி வைத்த னர். தற்போது வழக்குகளுக்கான நீதிமன்ற கட்டணம் 'ஸ்டாம்ப் பேப்பர்' எனும் முத்திரைத் தாள் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு மாற்றாக இணையத் தளத்தின் மூலம் நீதிமன்றக் கட் டணம் செலுத்தும் வகையில் மின் னணு முத்திரை சென்னை உயர் நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
அறிமுக விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "போலி முத்திரைத் தாள்களைத் தடுக்க மின்னணு 'ஸ்டாம்ப்' முறை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது," என்று குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றத் திலும் மதுரை கிளையிலும் அறி முகமாகும் புதிய மின்னணு முத் திரை வசதி விரைவில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் சொன்னார். இதே நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, "மின்னணு முத்திரை மூலம் நீதிமன்ற கட்டணம் செலுத் துவது எளிமையாக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் போலி முத் திரைத்தாள்களை ஒழிக்க முடியும்," என்றும் தெரிவித்தார். இதில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்நீதி மன்ற நீதிபதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

