புதுடெல்லி: அண்மைக்காலமாக இந்திய அமைச்சர்கள் சீனாவிற்கு அணிவகுப்பதை அந்நாட்டுட னான எல்லைப் பதற்றத்தைத் தணிக்கும் இந்தியாவின் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா = சீனா எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாமில் கடந்த ஆண்டு சீனா சாலைப் பணிகளை மேற்கொண்டது. இதனையடுத்து, இந்திய ராணு வம் அங்கு படைகளை அதிரடி யாகக் குவித்தது. இதற்குப் பதிலடியாக டோக்லாம் பகுதி தங் களுக்குச் சொந்தமானது எனக் கூறிய சீனா தங்களது ராணுவத்தி னரையும் எல்லையில் குவித்தது. இருநாடுகளின் இந்த ராணுவ நடவடிக்கைகள் எல்லையில் போர் பதற்றத்தை உண்டாக்கியது.
அது மட்டுமல்லாமல் இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர் களின் கருத்து மோதல்கள் பதற் றத்தை மேலும் அதிகப்படுத்தியது. பின்னர், கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜி=20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்துக் கைகுலுக்கி பேசினர். அதன் °பிறகு, இந்தியாவுட னான எல்லைப் பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனா சென்றார். ஷங்காய் நகரில் கடந்த 13ஆம் தேதி சீன அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை அவர் சந் தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், வரும் 24ஆம் தேதி பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற் பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று சீனா புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின்போது சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி=யைச் சந்திக்கும் சுஷ்மா, டோக்லாம் எல்லைப் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

