பணமதிப்பிழப்பு நடவடிக்கை: இரு மடங்கானது கள்ளநோட்டு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: இரு மடங்கானது கள்ளநோட்டு

2 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நட வடிக்கைக்குப் பிறகு கள்ள நோட்டுப் புழக்கம் அதிகரித்து இருப்பதாக நிதிப் புலனாய்வு பிரி வின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு கருப்பு பணம், கள்ள நோட்டு, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பிரதமர் மோடி அறிவித்தார். கள்ளநோட்டுப் புழக்கம் சந்தேக பணப்பரிமாற்றம் குறித்து இந்திய வங்கிகள் அளித்த தகவலின் அடிப்படையில் நிதி புலனாய்வு பிரிவு ஒன்று அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையின்படி கள்ள நோட்டுப் பரிமாற்றங்கள் கடந்த 2016=17ஆம் ஆண்டில் 7.33 லட்சம் முறை நிகழ்ந்துள்ளது.

இது 2015=16ஆம் ஆண்டில் 3.22 லட்சமாக இருந்து இருக்கிறது. இது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். எனினும் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட வில்லை. இதைப்போல சந்தேக பணப்பரிமாற்றங்களைப் பொறுத்த வரை 480 விழுக்காடு அளவுக்கு அதிகரித்து இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி 2016=17ஆம் ஆண் டில் 4,73,006 முறை இத்தகைய பரிமாற்றம் நடந்திருப்பதாக கண் டறியப்பட்டு உள்ளது. இது முந் தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகம் ஆகும்.

இத்தகைய சந்தேக பரிமாற்றங் கள் பெரும்பாலும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ளப்பட்டதாக இருக்க லாம் எனக் கருதப்படுகிறது. இப்படி கள்ளநோட்டுப் புழக்கம் மற்றும் சந்தேக பரிமாற்றங்கள் அதிகரிப்பதற்குப் பணமதிப்பு நீக்கமே காரணம் என்று கூறியுள்ள நிதி புலனாய்வு பிரிவு இத்தகைய விளைவுகளை வரும் ஆண்டு களிலும் காண முடியும் என்றும் கூறியுள்ளது.