புதுடெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தகுதி நீக்கம் செய்யும் தீர் மானத்தை அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைக் கேட்க துணை அதிபரும் மேலவைத் தலைவரு- மான வெங்கையா நாயுடு முடிவு செய்து உள்ளார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, விசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டு வதாக அவர் மீது செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய 4 மூத்த நீதிபதிகள் கடந்த ஜனவரி மாதம் குற்றம்சாட்டினார்கள். இதைத் தொடர்ந்து, தீபக் மிஸ்ரா மீது மேற்கண்ட குற்றச் சாட்டு உள்ளிட்ட பல்வேறு புகார் களைக் கூறிய எதிர்க்கட்சிகள் அண்மையில் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர முயற்சித்த னர். ஆனால் அது கைகூடவில்லை.
என்றாலும் பதவி நீக்க தீர் மானம் கொண்டு வருவது தொடர் பாக கடந்த மாதம் முதல் எதிர்க் கட்சிகள் தீவிர முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற மாநிலங் களவை தலைவரும் துணை அதி பருமான வெங்கையா நாயுடுவிடம் தீபக் மிஸ்ராவைத் தலைமை நீதிபதி பதவியில் இருந்து தகுதி நீக்க தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் நாடாளுமன்ற மாநிலங்களவையைச் சேர்ந்த 71 எம்பிக்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.
இந்த தீர்மானத்தை அனுமதிப் பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க முடிவு செய்துள்ளார் வெங்கையா நாயுடு. உச்ச நீதிமன்றத் தலைமை நீதி பதியைப் பதவி நீக்க 50 எம்பி களின் கையெழுத்துக் கிடைத் தாலே போதுமானது என்ற நிலை யில் இந்த தீர்மானத்தின் மீது வெங்கையாவின் முடிவு குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

