தமிழ்நாட்டு அரசியலில் பல வியப்புகளும் திருப்புமுனைகளும் இடம்பெற்று வரும் வேளையில், அவற்றையெல்லாம் சமாளித்து தாக்குப்பிடித்து நிற்கும் நோக்கத் துடன் பாஜக அரசாங்கம் புதிய கூட்டணிக்கு அச்சாரம் போடும் வேலையை மும்முரமாகத் தொடங்கி இருக்கிறது. ஆளும் அதிமுக தரப்பை எப்படியாவது தன் பக்கம் இழுத்து விட பாஜக முடிவு செய்து இருப்ப தாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த முயற்சியின் முதல்படி யாக மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவுடன் வெற்றிபெற பாஜக வியூகம் வகுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வியூகத்தின் அடிப்படை யில் அடுத்த ஆண்டு நடக்க விருக்கும் நாடாளுமன்றத் தேர் தலுக்குப் பலமிக்க கூட்டணி ஒன்றை ஏற்படுத்திவிடலாம் என்று அந்த தேசிய கட்சி கணக்குப் போடுவதாகத் தெரிகிறது. மேலவையின் துணைத் தலை வர் தேர்தல் அடுத்த மாதம் இறுதி யில் நடக்கிறது. மேலவையில் மொத்தம் இருக்கும் 245 உறுப் பினர்களில் பாஜகவுக்கு 68 பேர் உள்ளனர். காங்கிரசுக்கு 51 பேரும் அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளுக்குத் தலா 13 உறுப்பினர்களும் உள்ளனர்.
அந்த அவையில் மொத்தம் 31 கட்சிகளுக்கு உறுப் பினர்கள் இருக்கிறார்கள். பாஜகவுக்கு இதுநாள்வரை ஆதரவு அளித்து வந்த தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகள் தங்கள் ஆதரவை இப்போது விளக்கிக் கொண்டுவிட்டன. இந்த நிலையில், மேலவை துணைத் தலைவர் தேர்தலில் மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒருங் கிணைந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜகவுக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்திவிட் டால் பாஜக வெற்றி பெறுவது சிக்கலாகிவிடக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

