இந்தியாவில் பல இடங்களிலும் திடீரென்று பணப்புழக்க பற்றாக் குறை ஏற்பட்டு பொதுமக்கள் தொல்லைக்கு உள்ளாகி இருக் கிறார்கள் என்று கூறப்படுகிறது. நாட்டின் பல மாநிலங்களிலும் ஏஎடிஎம் இயந்திரங்கள் காலியாக உள்ளதாகவும் வங்கிகளுக்குப் பண வரத்து போதிய அளவுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டது. இந்தப் பற்றாக்குறை முற்றிலும் நீங்கிவிட்டதாகத் தெரியவில்லை. குறிப்பிடத்தக்க அளவுக்கு ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாத நிலை கர்நாடக மாநிலத் தில் நிலவுவதால் அங்கு பல இடங்களிலும் மக்கள் போதிய பணம் எடுக்க முடியாமல் சிரமப் படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும் அந்த மாநிலத் தில் அடுத்த மாதம் நடக்கவிருக் கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிகாரிகள் எடுத்துவரும் திடீர் சோதனைகளில் பல கோடிக் கணக்கான அளவுக்கு ரூ.2000 நோட்டுகள் சிக்கியிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டில் ரூ.2000 நோட்டுகள் போன இடம் தெரியாமல் மறைந் திருக்கும் நிலையில் அந்த நோட் டுகள் கர்நாடகாவில் கோடிக் கணக்கில் சிக்குவது அதிர்ச் சியை ஏற்படுத்தி இருப்பதாக வருமான வரித்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஏஎடிஎம் இயந்திரங்கள் பலவும் காலியாக இருக்கையில் வாக்கு களைக் குறிவைத்து ரூ.2000, ரூ.500 நோட்டுகள் பதுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. இது இந்தச் சோதனைகளின் மூலம் அம்பலமாகி இருக்கிறது.

