மலேசியாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இணை யத்தில் டுவிட்டரில் தானியக்கப் பக்கங்கள் செயல்படுவது குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டால் உட னடியாக அது பற்றி கவனிக்கப் படும் என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இத்தகைய கணக்குகள் வெள்ளம்போல் குவி வதாகவும் அவற்றில் அரசாங்கத் திற்கு ஆதரவாகவும் எதிர்த்தரப் புக்கு எதிராகவும் ஆயிரக்கணக் கான தகவல்கள் பதிவேற்றப்படு வதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறு வனம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடக்க விருக்கும் வேளையில், இணையத் தில் டுவிட்டர் கணக்குகளில் இத் தகைய அரசியல் கருத்துகள் பர பரப்பாக இடம்பெறுகின்றன. இத்தகைய கணக்குகளுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என் றும் இவற்றின் பின்னணியில் இருந்து செயல்படுவது யார் என் பது தமக்குத் தெரியாது என்றும் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆளும் அம்னோ கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தெரிவித்து இருக்கிறது.
இத்தகைய கணக்குகளை யார் வேண்டுமானாலும் அனாமதேய முறையில் பயன்படுத்த முடியும் என்றும் புகார்கள் வந்தால் இது பற்றி தம்முடைய அமைச்சு நட வடிக்கை எடுக்கும் என்றும் தொடர்பு அமைச்சர் சாலே சையது கெருக் டுவிட்டர் மூலம் தெரிவித் துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி பற்றி அவர் கருத்து தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2016ல் நடந்த அமெ ரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டோனல்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டது என்றும் அந்த முயற்சியில் டுவிட் டர், ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்றும் அமெரிக் காவில் சந்தேகம் கிளம்பி இருக் கிறது. என்றாலும் ரஷ்யா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

