ரகசிய டைரி சிக்கியது; நிர்மலாவுக்கு நெருக்கடி

ரகசிய டைரி சிக்கியது; நிர்மலாவுக்கு நெருக்கடி

2 mins read
78a55ed0-10d1-4edd-841b-c398dc73022c
-

விருதுநகர்: பல்கலைக்கழக அதி காரிகளின் ஆசைக்கு இணங்கும் படி கல்லூரி மாணவிகளை வற்பு றுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள பேராசிரியை நிர் மலா தேவியின் வீட்டுக்கு காவல் துறை சீல் வைத்துள்ளது. முன்னதாக அவரது வீட்டில் சோதனை நடவடிக்கை மேற் கொண்ட போலிசார், பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப் பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த கணினியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கல்லூரி மாணவிகளை பேராசி ரியையே தவறான பாதைக்கு கொண்டு செல்ல முற்பட்டது பல் வேறு தரப்பிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைய டுத்து நிர்மலா தேவி கைது செய் யப்பட்டார். மதுரை சிறைச்சாலை யில் அடைக்கப்பட்ட அவரை போலிசார் 5 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து, சிபிசிஐடி போலிசார் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சுமார் எட்டு மணி நேரம் இந்தச் சோதனை நீடித்தது. வீட் டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த நிர்மலா தேவியின் காரை சோதனையிட்ட போது ரகசிய டைரி ஒன்று சிக்கியதாகத் தெரி கிறது. அதில் மாணவிகளை பாலி யல் ஆசைக்கு இணங்க வற்பு றுத்தியது, பல்கலைக்கழகத் தொடர்புகள் குறித்துப் பல்வேறு தகவல்களை அவர் எழுதி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நிர்மலா தேவியின் கணினியில் இருந்தும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

சோதனைக்குப் பின்னர் அங்கி ருந்த ஆவணங்களை போலிசார் 5 பைகளில் எடுத்து சென்றனர். அப்போது நிர்மலா தேவியின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே நிர்மலா தேவி பணியாற்றும் தேவாங்கர் கல்லூரி யின் முன்னாள் செயலர் சவுண் டையாவிடமும் விசாரணை நடத் தப்பட்டது. நிர்மலா எவ்வாறு பணி யில் சேர்ந்தார்? என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை போலிசார் அவரிடம் சேகரித்துள்ளனர். அதேபோல் நிர்மலா தேவியின் மாமனார் பாண்டியனிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை கைப்பற்றப் பட்டுள்ள ஆவணங்களை முக்கிய ஆதாரங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலிசார் முடிவு செய்துள்ளனர்.

நிர்மலாவின் வீடு. படம்: ஊடகம்