கடல் சீற்றம்: குமரி மக்கள் மத்தியில் நீடிக்கும் அச்சம்

கடல் சீற்றம்: குமரி மக்கள் மத்தியில் நீடிக்கும் அச்சம்

1 mins read

குமரி: கடும் கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி யில் உள்ள 18 கடலோரக் கிராமங்களில் வசிப்போர் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. 150க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். கடந்த இரு தினங்க ளாக கன்னியாகுமரி கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. பத்து அடி உயரத்துக்கும் மேல் கடல் அலைகள் எழுந்தன. குளச்சல், தேங்காய் பட்டினம், நீரோடி, மார்த் தாண்டம் போன்ற பகுதிக ளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கொட்டில்பாடு மற்றும் குறும்பனை கிராமங்களில் 5 வீடுகளை ராட்சத அலைகள் இழுத்துச் சென்றன.

குமரியில் உள்ள நவஜீவன் குடியிருப்பில் வீடு ஒன்று இடிந்து விழுந் தது. வள்ளவிளை கரை யோரப் பகுதியில் அமைந் துள்ள சில வீடுகளில் கடல் அலைகள் புகுந்தன. இதையடுத்து 150 வீடுக ளில் வசித்து வருபவர்கள் வீட்டை விட்டு வெளியேறி னர். கொட்டில்பாடு, ராஜக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 15 அடி உயரத்திற்கும் மேல் கடல் அலைகள் எழுவதாகவும், இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பீதியுடன் நாட்களைக் கடத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தேங்காய்பட்டினம், இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 படகுகளை கடல் அலைகள் இழுத்துச் சென்றன.