ஒப்பந்ததாரர் என்ற பெயரில் மணல் கடத்தல் நடப்பதாக புதிய புகார்

ஒப்பந்ததாரர் என்ற பெயரில் மணல் கடத்தல் நடப்பதாக புதிய புகார்

1 mins read

சென்னை: அரசு ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் பொதுப்பணித் துறை மூலம் தினமும் 300 லாரிகளுக்கு மணல் வழங்கப்படு வதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். யார் இந்த ஒப்பந்ததாரர்கள், எந்த திட்டத்துக்காக மணல் வழங்கப்படுகிறது என்பன போன்ற விபரங்கள் புதிராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். "இணையம் வழி மணல் விற்பனை நடந்து வந்தாலும், நூதன முறையில் மணல் கடத்தலும் நடக்கிறது. இது தெரிய வந்த பிறகும், அரசு மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நூதனக் கடத்தலைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்துள்ளார்.