தமிழக ஆளுநர் நீடிப்பார் எனத் தகவல்

தமிழக ஆளுநர் நீடிப்பார் எனத் தகவல்

1 mins read
Google News Preferred Icon

தூத்துக்குடி: சில சர்ச்சைகளில் சிக்கியுள்ள தமிழக ஆளுநர் பன் வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு இக்கோரிக்கையை ஏற்க வாய்ப் பில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளுநரை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்துள்ளார். "ஆளுநர் தேவையில்லை என் பர். பிறகு அவரை நேரில் சந்திப்பர்.

அதையடுத்து ஆளுநர் வேண்டாம் என்று மீண்டும் கூறுவர். ஆளு நரை மத்திய அரசு நியமிக்கிறது. அவரைத் திரும்பப் பெறுவது குறித்தும் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்," என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் பல்வேறு சர்ச் சைகளில் சிக்கி உள்ள ஆளுநரை மாற்றுவதே நல்லது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர் தெரிவித்துள்ளார். "ஆளுநர் எந்தக் கட்சியையும் சாராமல் நடுநிலையோடு இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அந்த நிலைப்பாடு இல்லை," என்று திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.