காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக, தோழமைக் கட்சிகளின் மனிதச்சங்கிலி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக, தோழமைக் கட்சிகளின் மனிதச்சங்கிலி போராட்டம்

2 mins read

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று மாவட்ட தலைநகரங்களில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திமுக மற்றும் அதனுடன் தோழமை பாராட்டும் ஒன்பது கட்சிகள், அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலை மையில் அவரது கட்சியினர் மனிதச் சங்கிலி அமைத்தனர்.

சென்னை அண்ணா அறிவா லயத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமை யில் போராட்டம் நடந்தது. தஞ் சையில் நடந்த போராட்டத்துக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையேற்றார். நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இதற்கிடையே, தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை தற்போதுள்ள ஆட்சி யாளர்கள் நன்கு அறிந்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.

எனவேதான் இதுவரை கொள் ளையடித்ததைக் காப்பாற்றிக் கொள்ளவும் இன்னும் அதிகள வில் கொள்ளை அடிக்கவும் ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயல்படுவதாக திருமண நிகழ்வு ஒன்றில் பேசியபோது அவர் குறிப்பிட்டார். "உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உரு வாக்கவேண்டும் என உத்தர விட்டு இருக்கிறது. இதுகுறித்து நாம் சட்டப்பேரவையில் பலமுறை கேட்டும் பதில் கிடைக்கவில்லை. "மிக விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும். அவ்வாறு ஆட்சி அமைந்தவுடன் முதல் வேலையாக லோக் ஆயுக்தா சட் டத்தை நிறைவேற்றுவோம்.

அதன் பிறகு, இப்போது கொள்ளை யடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களை விசாரிப்போம். பிறகு, நூற்றுக்கு 90 விழுக்காடு அமைச்சர்கள் வெளியில் இருக்க மாட்டார்கள். சிறையில் இருப்பார் கள்," என்றார் ஸ்டாலின். தமிழகம் குறித்து, தமிழகம் மக்கள், விவசாயிகளைப் பற்றியும் கிஞ்சிற்றும் கவலைப்படாத ஆட்சி மத்தியில் இருப்பது உறுதியாகி விட்டதாக அவர் தெரிவித்தார்.