சேலத்தில் துவங்கியது மாம்பழப் பருவம்

சேலத்தில் துவங்கியது மாம்பழப் பருவம்

1 mins read
c70ce161-cdbf-4b05-b9f7-d274e006e726
-

சேலத்தில் மாம்பழப் பருவம் தொடங்கி உள்ளதால் வெளியூர்களுக்கு அவற்றை அனுப்பி வைக்கும் பணி வேகம் எடுத்துள்ளது. சேலம் மாம்பழம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது சேலம் பழச் சந்தைக்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி, நங்கவள்ளி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தினமும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்து குவிகின்றன. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் இப்பழங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக சேலம் மாங்காய், பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபால் தெரிவித்துள்ளார். படம்: தமிழக ஊடகம்