சென்னை வங்கியில் வட இந்தியர் கொள்ளை முயற்சி முறியடிப்பு

சென்னை வங்கியில் வட இந்தியர் கொள்ளை முயற்சி முறியடிப்பு

fallback-0

24 Apr 2018 - 7:48 am

1 mins read

பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை முயற்சி சென்னை: பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கி வாடிக்கையாள ரிடம் இருந்து ரூ.6 லட்சம் பணத் தைக் கொள்ளையடிக்க முயன்ற இளையர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலிசில் ஒப்படைத்தனர். இந்தப் பரபரப்புச் சம்பவம் சென்னை அடையாறு பகுதியில் நிகழ்ந்துள்ளது. நேற்று காலை இப்பகுதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கிக் கிளையில் வழக்கம்போல் நிறைய வாடிக்கையாளர்கள் குவிந்திருந் தனர். அப்போது திடீரென வங்கி யில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுத்தார். பின்னர் வாடிக்கையாளர் ஒருவர் அவரது கையில் வைத்திருந்த ரொக்கப் பணத்தைப் பறித்துக்கொண்டு மர்ம நபர் அங் கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து வாடிக்கையாளர் களும் வங்கிப் பாதுகாவலர்களும் அவரைப் பிடிக்க முயன்றபோது துப்பாக்கியை காட்டி மிரட்டித் தப்பித்தார் அந்நபர். எனினும் வங்கியிலிருந்து வெளியேறிய அவர், அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்கு வரத்து காவலர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரைப் பிடித்த போது போலிசாருக்கு பொது மக்களும் உதவிக்கரம் நீட்டினர்.