நிர்மலா தேவி விவகாரம்: ரூ.30 லட்சம் தந்து ஏமாந்ததாக தகவல்

நிர்மலா தேவி விவகாரம்: ரூ.30 லட்சம் தந்து ஏமாந்ததாக தகவல்

1 mins read
04d63147-e838-4c74-adf9-2287790c8216
-
Google News Preferred Icon

சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மைகள் விரைவில் வெளிவரும் என்று மதுரை காமராஜர் பல்பலைக்கழகத் தின் துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டையில் செய்தி யாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கல்லூரி மாணவிகளை பல் கலைக்கழக உயரதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மறை முகமாக வற்புறுத்திய குற்றச்சாட் டின் பேரில் கைதாகியுள்ளார் நிர்மலா தேவி. சிபிசிஐடி போலிசார் அவரிடம் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், "பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் பரபரப் பாகப் பேசப்படுகிறது. பரபரப்பு என்பது வேறு, உண்மை என்பது வேறு. நிர்மலா தேவி விவகாரத்தில் விரைவில் உண்மை வெளிவரும்," என துணை வேந்தர் செல்லத்துரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி குறித்த தகவல் களைச் சேகரிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிபிசிஐடி போலிசார் அடங்கிய ஒன்பது தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. இதற்கிடையே நிர்மலா தேவி யின் நண்பரும் உதவிப் பேரா சிரியருமான முருகன், விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் முன் னிலையானார். விசாரணையின் போது அவர் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டதாக வும் இந்த விவகாரத்தில் தொடர் புடையவர்களின் பெயர்களைத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படு கிறது.

முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரின் தூண்டுதல் காரணமாகவே தாம் மாணவிகளைத் தவறான வழியில் கொண்டுசெல்ல நேர்ந்ததாக நிர்மலா தேவி கூறியுள்ளார்.