சுட்டெரிக்கும் வெயில்: ஒன்பது நகரங்களில் நூறு டிகிரியை கடந்தது

சுட்டெரிக்கும் வெயில்: ஒன்பது நகரங்களில் நூறு டிகிரியை கடந்தது

2 mins read

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒன்பது நகரங்களில் நூறு டிகிரி வெப்பநிலை பதிவானது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல், மே ஆகிய இரு மாதங் களிலும் கோடை வெயில் சுட்டெ ரிப்பது வழக்கம். குறிப்பாக மே மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். கடும் வெயிலைத் தாங்கமுடியாமல் சில உயிரிழப்புகளும் ஏற்படுவது உண்டு. வழக்கம்போல் இந்தாண்டு கோடை வெயில் தகிக்கத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒன்பது நகரங்களில் வெப்பநிலை நூறு டிகிரியைக் கடந்தது. அண்டை மாநிலமான ஆந்திரா வில் பல்வேறு நகரங்களில் 110 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி யுள்ள நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி அள விலேயே வெப்பநிலை உள்ளது.

"கரூர் பரமத்தியில் 105.44, திருத்தணியில் 104.9, திருச்சியில் 104.54, வேலூர், சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 103.1, மதுரையில் 102.56, தருமபுரியில் 101.66, சென்னை மீனம்பாக்கத்தில் 100.22 டிகிரி வெப்பநிலை பதி வாகியுள்ளது," என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங் களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மாநிலத்தின் உட்பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என் றும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர் பிரதேசங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட கோடை காலத்திற்கேற்ற சுற்றுலாத் தளங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.