விஜயகாந்த்: முதல்வராகும் வாய்ப்பை இழந்தார் ஸ்டாலின்; என்னை அவருக்குப் பிடிக்காது

விஜயகாந்த்: முதல்வராகும் வாய்ப்பை இழந்தார் ஸ்டாலின்; என்னை அவருக்குப் பிடிக்காது

2 mins read

சென்னை: திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலினுக்கு தம்மைப் பிடிக்காது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேட்டிற்கு அளித் துள்ள ஒரு பேட்டியில், இனி ஸ்டாலினால் முதல்வராக முடி யாது என்றும், தமக்கும் ஸ்டா லினைப் பிடிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "உடல்நலம் குன்றியுள்ள திமுக தலைவரை நான் சந்தித்துப் பேசக் கூடாது என்று மு.க.ஸ்டா லின் திட்டமிட்டு தடுத்துவிட்டார். கருணாநிதியைச் சந்திக்க வேண் டும் என்று முதல் ஆளாக நான் கேட்ட போதும் அனுமதி மறுக் கப்பட்டது.

"கலைஞரை நான் சந்திக்க நினைத்தது அவரது உடல் நிலையை விசாரிப்பதற்காகத் தான். ஆனால் மு.க.ஸ்டாலின் ஏன் என்னைப் பார்த்து பயப்பட்டார் என்று தெரியவில்லை," என விஜயகாந்த் கூறியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது திமுக தரப்பில் இருந்து தம்மிடம் கூட்டணிக்காக பேசப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், சரியான அளவுக்கு தொகுதிகள் தரும் பட்சத்தில் கூட்டணி அமைக்க தானும் தயா ராக இருந்ததாகத் தெரிவித்துள் ளார். "திமுகவிடம் 60 தொகுதிகள் ஒதுக்கித் தரும்படி கேட்டேன். ஆனால் அவர்கள் 40 இடங்கள் தான் தர முடியும் என்றனர். மேலும் நான் ஆட்சியிலும் வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டேன்.

"கூட்டணி ஆட்சிக்கு மட்டும் மு.க.ஸ்டாலின் 2016இல் ஒத்துக் கொண்டிருந்தால் இன்று அவரும் நானும் அமைச்சர்களாக இருந்தி ருப்போம். 2016ஆம் ஆண்டு எங்களுடன் கூட்டணி அமைத்தி ருந்தால் இப்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்திருப்பார்," என்று விஜயகாந்த் கூறியுள்ளார். முதல்வராவதற்கான நல்ல தொரு வாய்ப்பை ஸ்டாலின் இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், கமல், ரஜினி மட்டுமல்லாமல் மேலும் 5 நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் எதுவும் நடக்கப்போவ தில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற அறவே வாய்ப்பில்லை என் றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.