சென்னை: பறக்கும் ரயிலில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளையர் கைதானார். நேற்று காலை பறக்கும் ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்த ஆடவர், அங்கிருந்த இளம்பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் உதவி கேட்டு குரலெழுப்ப, அந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சிவாஜி, அந்நபரை மடக்கிப் பிடித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேல் நேரில் விசாரணை நடத்தினார். கைதானவர் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சத்யராஜ் என்பது தெரிய வந்துள்ளது.
ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஆடவர் கைது
1 mins read

