சென்னை: கட்சியில் பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு ஒரு போதும் ஆட்படாமல், அவற்றை வென்று காட்ட வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். "நமது சிந்தனையையும் கவனத்தையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டிய தருணம் இது. இதனை திசை திருப்பும் எந்த ஒரு செயலும் கட்சி விரோதப்போக்கு என்பதை கருத்தில் கொள்வோம். "கழகத்தின் வீறு கொண்ட முன்னேற்றத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அனைத்து வழிகளிலும் விரோதிகள் முயன்று வருகின்றனர்," என்று தினகரன் மேலும் கூறியுள்ளார். சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையே மோதல் வலுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூழ்ச்சியை வென்று காட்டுவோம்: டிடிவி தினகரன் உறுதி
1 mins read

