பேராசிரியர் மீது பாலியல் புகார்: வேறு கல்லூரிக்கு மாற்றம்

பேராசிரியர் மீது பாலியல் புகார்: வேறு கல்லூரிக்கு மாற்றம்

1 mins read

சென்னை: கடந்த கல்வி ஆண்டில், சென்னை மாநில கல்லூரியில் பணியாற்றும் கவுரிசங்கர் என்ற பேராசிரியர் மீது, மற்றொரு பேராசிரியை, பாலியல் புகார் கொடுத்ததாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு, பேராசிரியர் கவுரிசங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறினார். நிர்மலாதேவி விவகாரத்தை தொடர்ந்து இன்னொரு பேராசிரியரும் பாலியல் புகாரில் சிக்கிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "கவுரிசங்கர் விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட் டது. அதையடுத்து அவர் வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்," என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.