கருணாஸ்: பாதுகாப்பு இல்லை

கருணாஸ்: பாதுகாப்பு இல்லை

1 mins read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தமக்குப் பாதுகாப் பில்லை என எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். தமது திருவாடானை தொகுதி பக்கம் வருவதைத் தவிர்ப் பதற்கு அமைச்சர் மணிகண்டன்தான் காரணம் என்றும் செய்தி யாளர்களிடம் பேசுகையில் அவர் பகிரங்கமாக சாடினார். "தொகுதிக்குள் வரும் போது, நான்கு பேரை நிறுத்தி இவர்களே கல் எறிகின்றனர். கேட்டால் இன்னொரு சமுதாயத்தினர் எறிந்ததாகச் சொல்கின்றனர். "முதல்வராக ஜெயலலிதா இருக்கும் வரை, நான் வாரந்தோறும் தொகுதிக்கு வந்து மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். அவர் மறைவுக்குப் பின்னர் பணிகள் எதுவும் நடக்கவில்லை," என்றார் கருணாஸ்.