சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சேலத்தில் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம் மதிய வேளையில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை தொலைபேசி வழி தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், பல்கலைக்கழக வளாகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அரை மணி நேரத்தில் அது வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து சேலம் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலிசார், அங்கு விரைந்தனர். பின்னர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு மையம், பதிவாளர் அறை உட்பட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள் ளப்பட்டது. எனினும் மாலை வரை நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை போலிசார் தேடி வருகின்றனர்.
பெரியார் பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலைவீச்சு
1 mins read

