சென்னை: ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் நான்காவது நாளாக நேற்றும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இத்தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை விட குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது என்பது ஆசிரியர்களின் குற்றச்சாட்டு. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை. இதை வலியுறுத்தி சென்னையில் திங்கட்கிழமை முதல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்
1 mins read