சென்னை: காவிரி விவகாரம் குறித்து தமிழக முதல்வர் டெல்லியில் பிரதமருடன் பேசுவார் என நாடாளுமன்ற துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நிலை குறித்து முதல்வர் நன்றாக அறிந்துள்ளார் என்றார். "எனவே டெல்லி செல்லும்போது முதல்வர் நமது நிலைப்பாடு குறித்து பிரதமரிடம் எடுத்துச் சொல்வார். காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை அறிந்து மத்திய அரசு செயல்படும் என நம்புகிறேன்," என்று தம்பிதுரை மேலும் குறிப்பிட்டார்.
தம்பிதுரை: மத்திய அரசு தமிழர் உணர்வறிந்து செயல்பட வேண்டும்
1 mins read

